“போதைப் பொருளற்ற தென்னிந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தேவை”-டிஜிபி திரிபாதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தென் பிராந்திய அதிகாரிகள் கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கவலை தெரிவித்துள்ளார்.


Advertisement

போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவிற்கான தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Image result for dgp tripathi


Advertisement

கூட்டத்தில் பேசிய தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் வழிகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொண்டு இளம் தலைமுறையினரை இந்த சீர்கேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டியதன் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அனைத்து மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதைப் பொருளற்ற தென்னிந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement