விருதுநகர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜோதிபுரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி மூலம் தாமிரபரணி குடிநீர் 5 நாள்களுக்கு ஒருமுறை வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது வந்தது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் இதனால் குடிதண்ணீர் இல்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அருப்புகோட்டை நகர்காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!