சக வீரரை அடித்த பங்களாதேஷ் பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹூசைன். இவர் அந்த அணிக்காக, 38 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 6 டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இப்போது தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வந்தார். டாக்கா -குல்னா டிவிஷன் அணிகள் இடையிலான போட்டி குல்னாவில் நடந்து வருகிறது.
இதில் டாக்காவுக்காக ஆடும் ஷகாதத், தனது பந்துவீச்சு குறித்து விமர்சித்த சக வீரர் அராபத் சன்னியை நேற்று முன் தினம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததை அடுத்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஷகாதத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. இதனால் போட்டியின் பாதியிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஷகாதத் ஹூசைனுக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை