தண்டவாளத்தில் கல் வைத்த பள்ளி மாணவர்கள் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்ததாக, மூன்று பள்ளி மாணவர்களை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்  கைது செய்தனர்.


Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் மற்றும் மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே
 ஜோலார்பேட்டை காட்பாடி நோக்கி செல்லும்  ரயில் வழித்தடம் உள்ளது. குடியாத்தம் பகுதியை பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மதியம் ஒரு மணி அளவில் 6 ஜல்லிக் கற்களை தண்டவாளத்தில் வைத்துள்ளனர். 


Advertisement

இந்நிலையில் வளத்தூர் ரயில் நிலையத்தில் பணிபுரியும் வழித் தடங்களை சரிபார்க்கும் ரயில்வே ஊழியர் ஆசிஷ்குமார், வழித் தடத்தில் செல்லும்போது பள்ளி மாணவர்கள் கல் வைத்ததை பார்த்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குடியாத்தம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மூன்று பள்ளி மாணவர்களையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement