தாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓசூர் அருகே அரசுப் பள்ளிக்கு தாமதமாக வந்த 28 ஆசிரியர்கள் மீது முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியா்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவது இல்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார்கள் வந்தன. பள்ளியில் மாணவா்களின் தோ்ச்சி விகிதமும் குறைந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 


Advertisement

அப்போது பள்ளிக்கு தாமதமாக தலைமையாசிரியா் வந்ததும், பள்ளியில் மாணவா்கள் வகுப்புக்கு வெளியே அமா்ந்திருந்ததும் தெரியவந்தது. ஆசிரியர்கள் ஒரு வாரமாக பயோ-மெட்ரிக் முறையில் தங்களது வருகையை பதிவு செய்யாமல் இருந்ததும், இரு ஆசிரியா்கள் யாரிடமும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த முதன்மைக்கல்வி அலுவர் கே.பி.மாகேஸ்வரி, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். 

அவர் கூறும் போது, “அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியா்களின் வருகைப் பதிவை கண்காணிக்க பயோ - மெட்ரிக்
 முறையை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அனைத்து அரசுப் பள்ளியிலும் பயோ - மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற திடீர் பயோ - மெட்ரிக் வருகைப் பதிவு ஆய்வு தொடரும்” என்று தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement