சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரதநாட்டிய ஆசிரியர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆவடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பரதநாட்டிய ஆசிரியரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

ஆவடி அடுத்த கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம்(53). இவர் தன்னுடைய வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் அதேப்பகுதி சுவாதி தெருவை சேர்ந்த 11வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த மாதம் 29ந்தேதி சிறுமி நாட்டியம் கற்க பரதநாட்டிய பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ரவிவர்மா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 


Advertisement

இதையடுத்து சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறி பரத நாட்டிய பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அழுதுள்ளார். இதனையடுத்து, நேற்று இரவு பரத நாட்டிய பள்ளியை சிறுமியின் பெற்றோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மேலும் ரவிசர்மாவுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்ததையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 


Advertisement

இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிசர்மாவை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement