பத்ரிநாத்தின் தமிழ் வர்ணனை எப்படியிருக்கும்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளராகப் பணியாற்ற இருக்கிறார் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடியவர் தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத். இப்போது அணியில் இடம்பெறாமல் இருக்கும் இவர், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை தமிழில் வர்ணனை செய்யப்போகிறார். இந்தப் போட்டி லண்டனில் வரும் 1-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தமிழிலும் போட்டியை வர்ணனை செய்ய இருக்கிறது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி ஆகியோரை தமிழ் வர்ணனைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் பத்ரிநாத்தையும் அழைத்துள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, ‘சாம்பியன்ஸ் போட்டியில் விளையாடும் தோனி, கோலி உள்ளிட்ட வீரர்களை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடன் நானும் ஆடியிருக்கிறேன். அவர்களின் ஆட்டத்தை தமிழில் வர்ணனை செய்ய இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் விளையாட்டை விட பேசுவது எளிது’ என்றார்.


Advertisement
loading...
Related Tags : badrinath

Advertisement

Advertisement

Advertisement