பள்ளி விடுமுறை தாமதமாக அறிவிப்பு: தவிக்கும் மாணவர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Advertisement

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக விருதுநகர், மதுரை ஆகிய  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் காலையிலேயே விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டுச்சென்றனர். திடீரென்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. இதனால் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பாதி வழியில் திரும்பினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெற்றோர்கள், மழையால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் தாமதமான அறிவிப்பு மாணவர்களை பாதிக்கிறது. எனவே மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement