“ எப்படி இருக்கிறான் சுர்ஜித்”- ஒருநாளை கடந்து தொடரும் மீட்புப் பணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி, 24 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர்  70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை தற்போது 80 அடி ஆழத்தில் உள்ளது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும்.


Advertisement

நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தையை மீட்க பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. 24 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே மணல் மூடியுள்ளதால் சுர்ஜித்தின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement