“நல்ல தருணங்கள் மட்டுமே” - தோனி படத்தை ட்வீட் செய்த பன்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி சேர்க்கப்படவில்லை.


Advertisement

Image

இந்நிலையில், ரிஷப் பன்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, “நல்ல தருணங்கள் மட்டுமே” என பதிவிட்டுள்ளார். மேலும் தோனியின் செல்லப் பிராணிகளுடன் விளையாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். நேற்று வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின் பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்


Advertisement

அப்போது பேசிய அவர், “உலகக் கோப்பைக்கு பின்பு தோனி விளையாடவில்லை. எனவே ரிஷப் பன்ட்டை இப்போது ஊக்கப்படுத்தி வருகிறோம். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை ஓரளவுக்கு பயன்படுத்தியுள்ளார். எனினும், அவர்தான் விக்கெட் கீப்பிங்கில் முதல் சாய்ஸ். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும், இந்திய அணியின் எதிர்காலத்திற்காக இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்றார். இந்நிலையில் தோனியை சந்தித்த ரிஷப் பன்ட் பல்வேறு ஆலோசனைகளை கேட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement