“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்ததால், பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 


Advertisement

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்ததாக கூறப்படுகிறது.


Advertisement

இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக மகா அந்த இளைஞரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே சிவகுமார் அவ்வப்போது மகாவை சந்தித்து, ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் உள்ள குளத்துப்பிரிவு என்ற பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மகாவை, சிவகுமார் கத்தியை காட்டி மிரட்டி தன்னை காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன் என எச்சரித்துள்ளார்.


Advertisement

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் சிவக்குமாரை தடுத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். காதலிக்க மறுத்த பெண்ணை பட்டப்பகலில் வாலிபர் கத்தியால் குத்திவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement