‘பிகில்’ பட வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்வீட் செய்துள்ளார்.
விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.
இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ‘பிகில்’ பட வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்வீட் செய்துள்ளார்.
அதில், ‘பிகில்’ படத்திற்கான சென்சார் நிறைவடைந்தது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிகில் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்