இரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 


Advertisement

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கிலும், பயனாளர்களை கவரும் விதத்திலும் இந்த அப்டேட்கள் உள்ளன. சில அப்டேட்கள் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. 


Advertisement

அப்படி ஏற்கெனவே சோதனையில் உள்ள ஒரு அப்டேட் தான் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ பேடிஎம், கூகுள் பே போல செயல்படும். கடந்த ஒரு வருடங்களாக சோதனை முயற்சியில் இருக்கும் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளதால், வாட்ஸ் அப் பணப்பரிவர்த்தனை நிச்சயம் பணம் அல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement