சென்செக்ஸ், நிஃப்டி சரிவு - வார அடிப்படையில் 4 மாதம் இல்லாத உயர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்கு சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.


Advertisement

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 167.17 புள்ளிகள் அல்லது 0.43% சரிவடைந்து 38,822.87 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்திய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 58.80 புள்ளிகள் அல்லது 0.51% வீழ்ச்சி அடைந்து 11,512.40 புள்ளிகளுடன் முடிந்தது. சென்செக்ஸ் வர்த்தகத்தில் வேதாந்தா, இண்டஸ்ண்ட் வங்கி, எஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, டிசிஎஸ், ஹீரோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகபட்ச சரிவை சந்தித்தன. 


Advertisement

அதேசமயம் பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி, ஆஐஎல், கோடாக் வங்கி உள்ளிட்டவை அதிகபட்சமாக 1.61% ஏற்றமடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்திருக்கும் போதிலும், வார அடிப்படையில் கணக்கீடு செய்தால் 4 மாதங்கள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வார அடிப்படியில் சென்செக்ஸ் 808 புள்ளிகளும், நிஃப்டி 232 புள்ளிகளுடன் ஏற்றம் கண்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்ரேட் நிறுவனங்களின் வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பால் இந்த ஏற்றம் அடைந்திருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement