“இந்தப் பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள்?” - இம்ரானிடம் ட்ரம்ப் கேள்வி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டல் செய்தார்.


Advertisement

ஐநா மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களை நோக்கி பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினார். அவருடைய கேள்விகள் காஷ்மீர் தொடர்பானதாகவே இருந்தது. அவருக்குப் பதில் அளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீங்கள் இம்ரான்கான் அணியைச் சேர்ந்தவரா? நீங்கள் கேள்விகளை கேட்காமல் உங்கள் கருத்துகளை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கேள்விகள் எல்லாம் அறிக்கையைப் போலவே உள்ளன எனத் தெரிவித்தார்.


Advertisement

அதற்குப் பதில் அளித்த பத்திரிகையாளர், நான் இம்ரான்கான் அணியைச் சேர்ந்தவன் இல்லை. நான் ஒரு சுதந்திரமான பத்திரிகையாளர் எனத் தெரிவித்தார். மேலும் சில கேள்விகளையும் கேட்டார். அப்போது சில கேள்விகளுக்கு ட்ரம்ப் பதில் அளித்தார்.

மீண்டும் கேள்வியை கேட்க முயன்ற பத்திரிகையாளரிடம், உங்களது கேள்வியை ஒரு விநாடி கேள்வியாக கேளுங்கள் என கிண்டலாக தெரிவித்தார். பின்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பார்வையை முன்வைத்தார் அந்தப் பத்திரிகையாளர். அப்போது இம்ரான்கானை நோக்கி திரும்பிய ட்ரம்ப், இந்த மாதிரியான பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள் என கிண்டலாக கேள்வி எழுப்பினார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது. 


Advertisement

அதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய ட்ரம்ப், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்திஸ்தம் செய்யத் தயார் என தெரிவித்தார்

loading...

Advertisement

Advertisement

Advertisement