‘அசுரன் படத்துக்கு பேனர் வேண்டாம்’ - தனுஷ் ரசிகர் மன்றம் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘அசுரன்’ திரைப்படம் வெளியாகும்போது பேனர் மற்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement

இதுதொடர்பாக தனுஷ் ரசிகர் மன்றத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் திரைப்படத்திற்கு கட் அவுட் மற்றும் பேனர் ஆகியவற்றை வைப்பதை தவிர்த்து, உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என ரசிகர் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது. 


Advertisement

முன்னதாக, சுபஸ்ரீ என்ற இளம்பெண் சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தால் உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமாப் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கூறி வருகின்றனர். அண்மையில் ‘காப்பான்’ திரைப்படம் வெளியாகிய போது பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். அதை ஏற்ற பல இடங்களில் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவில் மக்களுக்கு ஹெல்மெட் வழங்கியிருந்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement