“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா!” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விவேக்கிற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது.


Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி - வைஜெயந்தி மாலா நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் “நெஞ்சில் குடியிருக்கும்” என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித்திருக்கிறார். 


Advertisement

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால், சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில், நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகை வேண்டுமானாலும் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள், தவறில்லை. ஆனால் ஒரு நடிகரை காக்காய் பிடிப்பதற்காக, ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் சிவாஜியின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்றக் காட்சி வாசனத்தை விவேக் பேசி கிண்டலடித்திருப்பதாகவும், இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement