சவுதி அரேபியாவில், எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 1991ஆம் ஆண்டு பிறகு ஒரு நாளில் மிகப்பெரிய உயர்வை கண்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலை 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள மற்றொரு எண்ணெய் ஆலையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கினர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய்யை சவுதி அரேபியா உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!