இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு படை பயிற்சியின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் சேர்ந்து அசாம் பிரிவின் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். 


Advertisement

இந்தியா-அமெரிக்கா இடையே  ‘யுத்த அபியாஸ்’ (Exercise 'Yudhabhyas') என்ற பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஒத்திகை பயிற்சியில் இந்தியா-அமெரிக்கா ராணுவப்படைகள் இணைந்து பாதுகாப்பு குறித்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தாண்டு இப்பயிற்சி அமெரிக்காவிலுள்ள லூயிஸ் மேக்கார்டு தளத்தில் நடைபெற்றது. 


Advertisement

இந்தப் பயிற்சி ஒத்திகையின் போது இந்திய மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் அசாம் ராணுவப் படையின் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இருநாட்டு ராணுவ வீரர்களும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே நடனம் ஆடுவது போல் காட்சி பதிவாகியுள்ளது. அவர்கள் மகிழ்ச்சியுடன் கை தட்டி ஆரவாரம் செய்வது போலவும் காட்சி உள்ளது.  

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement