வேறு கட்சிக்கு போகிறாரா அமமுக புகழேந்தி? - வீடியோ சர்ச்சை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமமுகவில் இருந்து பலர் தொடர்ந்து வெளியேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினரோடு செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement

வீடியோவில் பேசும் புகழேந்தி, “ போகும் அல்லது இருக்கும் இடத்தில் முகாந்திரம் இருக்க வேண்டும். இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்” எனத் தெரிவிக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. இதனால் டிடிவி தினகரனுடன் புகழேந்தி அதிருப்தியில் இருக்கிறார்..? விரைவில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறப்போகிறார் என்ற செய்தியும் அடிபடுகிறது.


Advertisement

இந்நிலையில் தன்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐ.டி.பிரிவு வீடியோ வெளியிட்டிருப்பதாக புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், முழு வீடியோவை வெளியிட வேண்டும், அதனை பார்த்தால் முழுமையாக புரியும் எனக் கூறியுள்ளார். அதிருப்தி இருப்பதாக வைத்துக்கொண்டாலும் தான் கட்சித் தலைமையிடம்தான் பேசியிருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே புகழேந்தி பேசுவதைப் பார்த்தால் அவர் வேறுகட்சிக்கு செல்வதைப் போல் உள்ளது என வெற்றிவேல் கூறியுள்ளார். வீடியோவை அமமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டதாக புகழேந்தி கூறுவது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement