[X] Close >

’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது!

Gujarat-Man-Set-Jeep-On-Fire-After

பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகாததால் வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்துக் எரித்தவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.


Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் இந்திரஜித் சிங் ஜடேஜா (33). இவர் நண்பர் நிமேஷ் கோஹல் (28). ஜடேஜா, தனக்கு சொந்தமான ஜீப்பை கடந்த 2 ஆம் தேதி ஸ்டார்ட் செய்து பார்த்தார். ஆகவில்லை. பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகாததால் கடுப்பானார். பின்னர் கோதாரியா சாலையில் வண்டியை நிறுத்தி, அதில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென எரிந்தது.


Advertisement

இதை ஜடேஜாவின் நண்பர் நிமேஷ் வீடியோ எடுத்து அவர்களது நண்பர்களுக்கு அனுப்பினார். அதில் ஒருவர் பஞ்சாபி பாடலை இந்த வீடியோவின் பின்னணியில் சேர்த்து, டிக்டாக் செயலியில் பதிவேற்றி விட்டார். இதனால் இந்த வீடியோ வைரலானது. பின்னர் போலீசார் விசாரித்தபோதுதான் ஜடேஜாவும் நிமேஷூம் சிக்கினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வெறுப்பில் இப்படி செய்ததாகத் தெரிவித்துள்ளனர். சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட அவர்களை ராஜ்கோட் பக்திநகர் போலீசார் கைது செய்தனர்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close