ஹெச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு: போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. சேதமடைந்த அந்த கோவிலுக்குத் திருப்பணி செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

இந்நிலையில் அரியநாச்சி கிராமத்தில் நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹெச்.ராஜா பங்கேற்க இருப்பதாக இருந்தது. இதற்காக அக்கட்சியினர் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

கோவில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஹெச்.ராஜாவின் வருகை தேவையற்ற பிரச்னையை உண்டாக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement