தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி மீது பெண் எஸ்பி தொடர்ந்த பாலியல் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சி.வி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஜி மீது பெண் எஸ்பி கொடுத்த புகாரையும், சிபிசிஐடி பதிவு செய்த வழக்கையும் தெலங்கானா மாநில காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டனர்.
விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை ஐ.ஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் வைக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக தலைமை செயலாளர் உடனடியாக தெலங்கானா தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவற்றை பெற்றதும் மூத்த பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்து, விசாரணையை தொடங்க வேண்டும் என தெலங்கானா மாநில காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கையில்லை என அர்த்தமாகாது என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை முடிந்தபின், அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெலங்கானா காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!