ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு அளித்தற்கு பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாடிய போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதனை வரும் தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கூறினார்.
அத்துடன் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் அகற்றம் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்பது நம் அனைவரின் முடிவில் தான் இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அமீர் கானுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளித்தற்கு அமீர் கானுக்கு எனது நன்றி. உங்களுடைய ஆதரவின் மூலம் பலர் இந்தப் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தில் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?