தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையத்தின் நிலை குறித்து நாளை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு, எந்த முன்னறிவிப்பும் இன்றி தடை உத்தரவை பிறப்பித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நாளை தகவல் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்