‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் பீச்சில் உற்சாக குளியல் போட்டுள்ளனர்.


Advertisement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்தப் பயணத்தில் ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் பயிற்சி போட்டி கடந்த 17ஆம் ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி அன்று முடிந்தது. இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் விளையாடவுள்ளன. ஆனால் இந்தத் தொடர் வரும் 26ஆம் தேதிதான் தொடங்குகிறது. அதற்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் உற்சாக பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, அண்டிகுவா பகுதியில் உள்ள ஜாலி கடற்கரை பகுதியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோகித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் உற்சாக குளியல் போட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் “வீரர்களுடன் பீச்சில் ஒரு அதிர்ச்சியூட்டும் நாள்” என்று கோலி குறிப்பிட்டுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement