வாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவாரூரில் கூட்டுறவு வங்கித் தேர்தல் வாக்காளர் பட்டியலில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி, 109 ஆண்டுகள் பழமையான வங்கியாகும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இந்த வங்கியில்தான் முதன்முதலாக உறுப்பினராக சேர்ந்தார். இந்த வங்கியில் நிர்வாகக்குழு உறுப்பி‌னர்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 14,817 பேர் இதில் வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக‌ தலைவர் கருணாநிதியின் பெயரும் இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. 

அதில் தெற்கு வீதி, முத்துவேலுவின் மகன் கருணாநிதி என்று தெளிவாக கருணாநிதியின் அடையாளம் இருந்தது. இதேபோல, கருணாநிதியின் நண்‌பர் தென்னனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் இனி வரும் காலங்களில், உயிருடன் இல்லா‌த, முன்னாள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தல் நடத்தவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள‌து. கருணாநிதியின் வங்கிக் கணக்கு முடிக்கப்படாமல், உயிர்ப்புடனேயே இருப்பதால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ள‌தாக வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement