இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’!

India-teammates-enjoy-dinner-at-Brian-Lara-s-residence

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா விருந்து வைத்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக இன்று பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா, இந்திய வீரர்கள் சிலருக்கு தனது வீட்டில் பார்ட்டி வைத்துள்ளார். இதில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, புஜாரா, மயங்க் அகர்வால், ஜடேஜா, ஆர்.அஸ்வின், பும்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரேன், கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், பிராவோ ஆகியோரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படத்தை பிராவோ தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது வீட்டில் பார்ட்டி வைத்த லாராவுக்கு நன்றி தெரிவித்துள்ள பிராவோ, ’’எனது இந்திய சக வீரர்களையும் சகோதரர்களை யும் சந்திப்பதில் எப்போதுமே மகிழ்ச்சிதான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement