[X] Close >

‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்

Dmk-leader-MK-Stalin-thanks-to-voters-for-vellore-constituency-election-victory

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர். முதலில் ஏ.சி.சண்முகமும், பிற்பகுதியில் கதிர் ஆனந்தும் முன்னிலை வகித்தனர். இருப்பினும் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இறுதியாக, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 26,995 வாக்குகள் பெற்றார். 


Advertisement

இந்நிலையில், திமுக வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.கவின் ரத கஜ துரக பதாதிகள் அதிகார ஆட்டம் போட்டாலும், மக்களை நம்பிய தி.மு.கவுக்கே மாலை சூடியிருக்கிறார்கள் வேலூர் வாக்காளர்கள்.

இடைத்தேர்தல் போன்ற இத்தேர்தலில், எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்!. வாக்காளர்கள், கழகத்தினர், தோழமைக் கட்சிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!” என தெரிவித்துள்ளார். 

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close