வால்பாறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த நான்கு நாளாக வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

கனமழையால் எஸ்டேட் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தங்களின் நிலை குறித்து புகார் தெரிவிக்க நிரந்தர வட்டாட்சியரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


Advertisement

                     

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement