[X] Close

சரியாக படிக்கவில்லை என கல்லூரியில் தாய் புகார் - மகன் விபரீத முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கடலில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


Advertisement

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (19) பொறியியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாயார் மகேஸ்வரி நேற்று கல்லூரிக்கு சென்று தன்னுடைய மகன் நன்றாகப் படிப்பதில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் குமார் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவுடன், தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் தன் மகனை காணவில்லை என தாய் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் உத்தண்டி கடற்கரை பகுதி அருகே சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அது காணாமல் போன சுரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கானாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தன் மகனின் தற்கொலையால் தாய் மனமுடைந்து சோகக்கடலில் மூழ்கியுள்ளார்.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

loading...

Advertisement

Advertisement

Advertisement