குஜராத் மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், காவலர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியதையடுத்து, கழுத்தளவு தண்ணீரிலும் கயிறு கட்டி மக்களை மேடான இடங்களுக்கு செல்ல மீட்பு படையினர் உதவினர். அங்குள்ள ஒரு வீட்டில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தையும், அதன் தாயும் சிக்கியிருப்பதாக அங்கிருந்த எஸ்.ஐ கோவிந்த் சவுடாவுக்கு தெரிய வந்தது.
Proud of the humanitarian work of this cop in Vadodara. Great courage & dedication. Rescued the baby & family. #VadodaraRains #sdrf #NDRF @GujaratPolice @IPS_Association pic.twitter.com/wWEVcJu3Ho — Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019
இதனையடுத்து விரைந்து வந்த அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், குழந்தையை துணிகளில் சுற்றி பிளாஸ்டிக் கூடையில் வைத்து சுமார் ஒன்றரை கி.மீ தூரம் வரை தலையின் மேல் சுமந்து பத்திரமாக மீட்டார். இதனை அம்மாநில டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளார். இதன் மூலம் அந்த எஸ்.ஐ க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!