பேருந்தின் கேபின் முன் அமர்ந்து ஓட்டுநரிடம் தகராறு செய்த பெண் - வீடியோ

women-arguments-with-bus-conductor--video

கேரள மாநிலம் ஆலப்புழாவில் தனது நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தின் கேபினில் ஏறி அமர்ந்து, பேருந்தை தான் இறங்க வேண்டிய இடத்திற்கு திருப்பச்சொல்லி ஓட்டுநரிடம் தகராறு செய்யும் இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து மலையாளப்புழா பகுதிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் தனது ஊரின் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளதால் ஆத்திரமடைந்தார். பின்னர் பேருந்தின் கேபினின் மேல் அமர்ந்து, "பேருந்தை திருப்புங்கள்" என்று கூறி ஓட்டுநரிடம் தகராறு செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


Advertisement

ஓட்டுநரை இருக்கையில் அமரச்சொல்வதும், " பேருந்தை திருப்பி நான் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்துங்கள்” என்று அடம்பிடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. நடத்துநரை "பெல் அடிப்பதுதான்" உங்களது வேலை என ஆபாசமாக திட்டுவதும் சக பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பெண் யார், உண்மையிலேயே அந்தப் பெண் கூறும் இடம் பேருந்து நிறுத்தும் இடம்தானா..? யார் மீது தவறு என்ற கோணத்தில் ஆலப்புழா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement