காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? அடுத்த வாரம் ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மே 25ஆம் தேதியே அவர் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்ட நிலையில், கட்சிக்கு அடுத்த‌ தலைவர் யார் என்ற குழப்பம் 2 மாதங்களாக நீடிக்கிறது.


Advertisement

கட்சி‌த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூடி, அது தொடர்பாக விவாதிக்கும் என மூ‌த்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். 

அதற்கு முன்னதாக கட்சி பொது செயலாளர்கள் மற்றும் மாநில கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பிரியங்கா காந்தியை கட்சி தலைவராக்க வேண்டுமென பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே சசி தரூரும் இதே கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement