இந்தியில் ஹிர்த்திக் ரோஷனுடன் இணைகிறார் தனுஷ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் தனுஷ் இந்திப் படம் ஒன்றில் ஹிர்த்திக் ரோஷன், சாரா அலிகான் ஆகியோருடன் நடிக்க இருக்கிறார்.


Advertisement

இந்தியில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்ஜனா (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவர் ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். கவனிக்கப்பட்ட இந்தப் படம், தனுஷூக்கு இந்தியிலும் பெயர் வாங்கித் தந்தது. இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் ’ஷமிதாப்’ என்ற இந்திப் படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். அவருடன் அக்‌ஷரா ஹாசன் நடித்திருந்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


Advertisement

இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இந்தியில் நடிக்கவில்லை. தமிழிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை ’ராஞ்ஜனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதில் தனுஷூடன் ஹிர்த்திக் ரோஷன் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சாரா அலிகான் நடிக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement