[X] Close

பாக். இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை - ராஜஸ்தானில் சிறப்பு முகாம்

Subscribe
Rajasthan-government-sets-Camps-for-Hindu-Migrants

பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ராஜஸ்தானில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


Advertisement

நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது. எனினும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த மசோதா பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமூக மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுத்தது. எனவே மசோதா பெரும் சர்ச்சையை கிளப்பியது. 


Advertisement

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இந்து மக்களுக்கு  குடியுரிமை அளிக்க ராஜஸ்தான் அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் சட்டப்பேரவை அமைச்சர் சாந்தி தரிவால்,“மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை மற்ற மாவட்டங்களுக்கு வரும் விண்ணப்பங்களை மாநில அரசு பரிசிலித்து வருகிறது. 

இதுவரை 2656 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பத்தினர். இவர்களில் 1112பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பதாரர்களில் 434 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 783 பேரின் விண்ணப்பம் பாதுகாப்பு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 


Advertisement

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்த 1310 மக்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யான்ந்த் ராய் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close