நாடாளுமன்றத்தில் பாஜக எம்பியின் பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குழந்தை ஒன்றுடன் மகிழ்ச்சியாக விளையாட புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


Advertisement

பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்று அவரை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்த குழந்தை ஒன்றுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக விளையாடிய படம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்று நாடாளுமன்ற வளாகத்தில் என்னை சந்திக்க ஒரு சிறப்பு மிக்க நண்பர் வந்தார்” எனக் கூறி அந்தக் குழந்தையுடன் விளையாடும் படம் பதிவிடப்பட்டுள்ளது. 


Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை இன்று பாஜக மாநிலங்களவை எம்பி சத்ய நாரணயனன் ஜெத்தியா(Satyanarayan Jatiya) தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது அவரின் பேத்தியுடன் பிரதமர் மோடி விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான படமே அவரது வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement