[X] Close >

இன்றைய முக்கியச் செய்திகள்..!

Top-News--15072019

கடைசி நேரத்தில் கண்டுபிடித்த கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.


Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாநில இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானம் செய்ய வரும் தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை என ராஜினாமா செய்த 14 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் மும்பை காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


Advertisement

எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. NEXT எனப்படும் தேர்வை எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லார்ட்ஸில் நடைபெற்ற பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்திருந்ததன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close