“தபால்துறைத் தேர்வுகள் இனி தமிழில் நடக்காதா?” - ஸ்டாலின் கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தபால்துறை தேர்வுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Advertisement

இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதி அனைத்து தபால் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.


Advertisement

இதனைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது” என்று தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள  சுற்றறிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.


 தபால்துறையில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை தமிழ் உள்ளிட்ட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென்று இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனிமேல் தேர்வு என்று கூறி, மத்திய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளவர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்று சதி எண்ணத்துடன் திட்டமிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் தபால்துறை, மாநில மொழிகளை அலட்சியம் செய்யும் வகையில், செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

மேலும் தமிழகத்தில் உள்ள மின்வாரியத்தில் வட மாநிலத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள அதிமுக அரசைக் கட்டாயப்படுத்தி, விதிகளை மாற்ற வைத்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அகில இந்திய அளவில், குறிப்பாக மத்திய அரசுத் துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு மொழி உரிமையின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பையும் தட்டிப்பறிப்பது ஓரவஞ்சகத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement