நெல்லை பாளையங்கோட்டையில் அதிமுக, அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 262-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜை நடைபெற்றது. பல சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் அழகு முத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்தநிலையில், அதிமுகவினர் மரியாதை செலுத்த வந்த போது, அங்கு அமமுகவினரும் குவிந்தனர். சிலைக்கு அமமுகவினர் முதலில் மாலை அணிவித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அது தொடர்பாக செய்தி சேகரித்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். அதனால் இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அதில், இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு