‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மற்றொரு பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில்‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 'வானில் இருள்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தில் மற்றொரு பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்களது ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்.
அஜித்குமாரின் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் EDM பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என தெரிவித்துள்ளார். போனி கபூரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் ரசிகர்கள் பலரும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்காக காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!