குஜராத் மாநிலத்தின் பிரபல கிராமியப் பாடகியான கீதா ராபரி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, அவர் பாடிய ஆல்பத்தை பிரதமருக்கு அர்ப்பணித்தார்.
குஜராத் மாநிலத்தின் பிரபல கிராமியப் பாடகி கீதா ராபரி. அவர் பாடிய ஆல்பம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்காக கீதா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி ஆண்டு விழாவில் கீதா ராபரி பங்கேற்ற போது சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றதாகவும், அதில் தனது பாடலை ரசித்த மோடி 250 ரூபாய் வழங்கி கவுரவித்ததாகவும் கீதா ராபரி தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் கீதா ராபரியை நான் ஊக்குவித்தது தனக்கு நினைவில் உள்ளது என்றும் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Geeta Rabari is a young and prolific singer from Gujarat, whose works have enthralled Gujaratis globally! I remember encouraging her to pursue singing when she was a child and today, I had the opportunity to interact with her. It was wonderful to know more about her experiences. https://t.co/WltG1oDDyl
— Narendra Modi (@narendramodi) July 8, 2019Advertisement
கிராமியப் பாடகியான கீதா ராபரி ரோனா ஷெர்மா என்று தொடங்கும் குஜராத் மொழி ஆல்பத்தை 25 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்