உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கான வாய்ப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதிக்கான இடத்தை முதல் அணியாக, ஆஸ்தி ரேலியா கைப்பற்றியது. அடுத்து, இந்திய அணி பிடித்தது. நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதி க்குச் சென்றுவிட்டது. நான்காவது இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன..
பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் போட்டியில் பங்களாதேஷை நாளை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வென்றால், தற்போது 9 புள்ளிகளில் இருக்கும் அந்த அணி, 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே 11 புள்ளிகளுடன் இருப்பதால் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும். இதனால், ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்குச் செல்லும். அதனடிப்படையில், நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் (+0.175) சிறப்பாக இருப்பதால் அந்த அணிக்கே வாய்ப்பு கிடைக்கும்.
குறைவான ரன் ரேட்டில் (-0.792) உள்ள பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழைய வேண்டும் என்றால் பங்களாதேஷூக்கு எதிராக மெகா வெற்றி பெற வேண்டும். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுக்க வேண்டும். பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். இந்த மேஜிக் நடக்க வாய்ப்பில்லை. அதோடு, பாகிஸ்தான் 2-வது பேட்டிங் செய்தாலும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதிபெறுவது உறுதி என்கிறார்கள்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை