நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி அத்துமீறி வனிதாவிடமும் அவரது குழந்தையிடமும் விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் என நடிகை வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “வனிதா விஜயகுமார் அவரது மூன்றாவது மகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த குழந்தையின் தந்தைக்கும் தெலுங்கானாவில் உள்ள காவல்துறைக்கும் தெரிந்தே தான் அந்த குழந்தையை வனிதா விஜயகுமார் அழைத்து வந்தார்.
வனிதாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தெலுங்கானா போலீஸ் வந்தது. இந்த வழக்கு உள்ள நீதிமன்றத்தில் குழந்தையை ஏற்கெனவே காண்பித்து விட்டோம். ஆனால் இதையெல்லாம் மறைத்து ஆனந்தராஜ் தெலுங்கானா போலீசிடம் தவறான தகவலைச் சொல்லி அழைத்து வந்துள்ளார்.
சட்டத்தை மதித்து தெலுங்கானா போலீசார் முன் வனிதாவின் குழந்தை ஜெனிதாவை ஆஜர்படுத்தினோம். தந்தையிடம் எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அம்மாதான் எனக்கு பாதுகாப்பு எனவும் ஜெனிதா தெலுங்கானா போலீசாரிடம் தெளிவாக கூறிவிட்டாள். தெலுங்கானா காவல்துறை விசாரணை வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
வனிதா விஜயகுமார் விவகாரத்தில் தெலுங்கானா போலீஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியில் வந்த பிறகு மனித உரிமை ஆணையத்தில் தெலுங்கானா காவல்துறை மீது புகார் அளிப்போம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
"தேர்தல் வந்துவிட்டதால் ஸ்டாலின் வேல் கூட குத்திக்கொள்வார்" - செல்லூர் ராஜூ
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!