ராஜ்யசபா வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் அதிமுக தீவிரம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணிகளை, அதிமுக தலைமை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


Advertisement

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக தரப்பில் மாநிலங்களவை எம்பிக்கான வேட்பாளர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு இடம் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டியுள்ள நிலையில் மீதமுள்ள 2 இடங்களில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்று அதிமுக தலைமை பரிசீலித்து வருகிறது. 


Advertisement

இந்நிலையில், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், அன்வர் ராஜா ஆகியோர், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். மற்றொரு புறம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, அதிமுக வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வில்சன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு எம்பி சீட் தேர்தல் ஒப்பந்தப்படி, மதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement