[X] Close >

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு

Uncovered-borewell-claims-life-of-a-girl-in-andra

ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


Advertisement

ஆந்திரா மாநிலம்  உடுக்கூரு பெத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகம்மா என்பவருக்கு 4 வயதில் கோபிராஜ் என்ற மகனும், மோக்சிதா என்ற 3 வயது மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது அரசுப்பள்ளிக்காக போடப்பட்ட 40 அடி ஆழமுள்ள, ஆழ்துளைக் கிணற்றில் முதலில் மோக்சிதாவும், பின்னர் கோபிராஜூம் தவறி விழுந்துள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் குழந்தைகளை மீட்க போராடியுள்ளனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.


Advertisement

 12 வது அடியில் சிக்கியிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற, ஆழ்துளைக் கிணற்றின் அருகே ஜேசிபி மூலும் பள்ளம் தோண்டப்பட்டது. முதல் அரை மணி நேரத்தில் கோபிராஜை அவர்கள் மீட்டனர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மோக்சிதாவை மீட்புக்குழுவினர் மீட்டனர். 

பின்னர் குழந்தை மோக்சிதவை ஆம்புலன்ஸ் மூலம் விடவளூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால், நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோக்சிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். முன்னதாக மீட்கப்பட்ட கோபிராஜூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close