“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து?” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு

No-Scientific-Data--Delhi-High-Court-Rejects-Plea-Against-Mobile-Tower-Installation

செல்போன் டவர் கதிர்வீச்சால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

செல்போன் சிக்னல் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வடக்கு டெல்லியைச் சேர்ந்த கோபால் நகர் ஆவாசியா நல சங்கம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. கோபால் நகரில் சர்ச் மற்றும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி ஜெயந்த் நாத் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, “செல்போன் சிக்னல் கோபுரங்களின் கதிர்வீச்சு மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கான அறிவியல் ஆதரங்கள் இல்லை. எந்த ஒரு ஆய்வின் முடிவும் அப்படி ஒரு தகவலை உறுதி செய்யவில்லை” என்று நீதிபதி தெரிவித்தார். மனுவையும் தள்ளுபடி செய்தார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement