ஏலத்திற்கு வரும்  விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ம் தேதி ஏலத்துக்கு வருகிறது


Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி மதுராந்தகம் மாமண்டூரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடன் பாக்கி இருப்பதால் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement

அதன்படி மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியும், சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ம் தேதி ஏலத்துக்கு வருகிறது. ரூ.5.52 கோடி கடன் தொகைக்காக ஏலம் விடுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் '' விஜயகாந்திடம் இருந்து பெறவேண்டிய கடன்பாக்கி தொகையான ரூ.5,52,73,825 மற்றும் வட்டி இதர செலவுகளை வசூலிப்பதற்காக அவரின் அசையா சொத்துகளை ’உள்ளவாறு’, ’உள்ளது உள்ளவாறு’, மற்றும் ’எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே’ என்ற அடிப்படையில் 26.07.2019 அன்று விற்பனை செய்யப்படும் என பொதுமக்களுக்கும் மற்றும் கடன்தாரர்கள்/ஜாமீந்தாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement