நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விருந்து : திமுக., காங் பங்கேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்தில், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்துக் கொண்டனர். 


Advertisement

17-வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. புதிய சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றிய நிலையில், முறைப்படியான மக்களவைக் கூட்டம் நாளை முதல் நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார். அசோக் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக எம்.பி. கனிமொழி, ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், பாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்.பி.க்கள் பங்கேற்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement