“முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். 


Advertisement

குடியரசுத் தலைவர் பேசும் போது, நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு தொடர்ந்து அழைத்துச்செல்ல மக்கள் வாக்களித்து மத்திய அரசை தேர்ந்தெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வலிமையான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப்பாதையில் நாடு பயணிப்பதாக தெரிவித்தார். 

மக்களவைத்தேர்தலில் 61 கோடி பேர் வாக்களித்ததன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மக்களவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 78 பெண்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 


Advertisement

விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும் என்றும், 13,000 கோடி ரூபாயில் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இனி வரும் சந்ததிகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஜலசக்தி துறை உருவாக்கப்பட்டுள்ள‌தாகவும், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நீலப் புரட்சிக்கு திட்டமிடப்படும் என்று கூறிய குடியரசுத்தலைவர், முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement